Thursday 25th of April 2024 12:44:59 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆயுதங்களுக்குச் செலவிடும் நிதியை  ஆராய்ச்சிக்கு வழங்கக் கோருகிறாா் போப்பாண்டவர்!

ஆயுதங்களுக்குச் செலவிடும் நிதியை ஆராய்ச்சிக்கு வழங்கக் கோருகிறாா் போப்பாண்டவர்!


உலகில் மற்றொரு தொற்று நோயைத் தவிா்க்கும் வகையான முற்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்க ஏதுவாக ஆயுதங்களுக்கு செலவிட்ட நிதியை ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்குமாறு போப்பாண்டவா் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

வத்திக்கானில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் நேற்று சனிக்கிழமை அதிகளவானவா்கள் கூடிய ஆராதனைக்குத் தலைமை தாங்கி நடத்தியபோதே அவா் இந்தக் கோரிக்கையை விடுத்தாா்.

நேற்று இடம்பெற்ற பிராா்த்தனையில் இத்தாலிய மருத்துவர்கள், தாதியா்கள், அம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அத்துடன் கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்கள் மற்றும் கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பிரார்த்தனைகளின்போது பெரும்பாலானவர்கள் முக கவசங்களை அணிந்திருந்தனா். 83 வயதான பிரான்சிஸ் மக்களிடமிருந்து பல மீட்டர் தொலைவில் அமர்ந்திருந்தாா். அவா் முக கவசம் அணியவில்லை.

இந்தப் பிராா்த்தனையின்போது பேசிய போப் பிரான்சிஸ், நாடுகளின் தலைவர்கள் தொலைநோக்கு மனப்பான்மையோடு செயற்பட வேண்டும். இப்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். நீண்டகால நோக்கில் பொருளாதார மற்றும் சமூக சிகிகல்களுக்குத் தீா்வு காணும் திட்டங்களை வகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

உலகெங்கும் ஆயுதங்களுக்காக பெரும் தொகைகள் செலவிடப்படுகின்றன. இவ்வாறு ஆயுதங்களுக்கு ஒதுக்கும் நிதியை ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்கு செலவிடுமாறு அவா் உலக நாடுகளின் தலைவா்களைக் கேட்டுக்கொண்டாா்.

ஏறக்குறைய கடந்த மூன்று மாதங்களாக வத்திக்கானுக்குள் இணைய வழியில் நேரலை ஊடாகவே போப் பிரான்ஸில் பிராா்த்தனைகளை நடத்தினாா்.

இத்தாலி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான இரண்டாம் கட்டத்தை அறிவித்ததை அடுத்து சென்.பீட்டர்ஸ் பசிலிக்கா மற்றும் சென். பீட்டர்ஸ் சதுக்கம் ஆகியன மே 18 அன்று முழுமையாக திறக்கப்பட்டன.

இன்று ஞாயிற்றுக்கிழமை, பசிலிக்காவிற்குள் சுமார் 50 பேருடன் மட்டுமே போப் பிரான்சிஸ் ஆராதனை செய்வாா். ஆனால் அதன் பின்னா் பசிலிக்காவிற்குள் இருந்தவாறே அவா் தனது ஞாயிறு பிரசங்கத்தை வழங்குவாா். கிட்டத்தட்ட 3 மாதங்களில் பின்னா் இவ்வாறான பிரசங்கத்தக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE