Wednesday 24th of April 2024 01:29:24 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம் கொண்டுவர ஐந்து நாடுகள் தீர்மானம்?

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம் கொண்டுவர ஐந்து நாடுகள் தீர்மானம்?


ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியமை குறித்து கவனத்தில் எடுக்காமல், மீண்டும் தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாட்டில் கொண்டு வர பிரிட்டன் தலைமையிலான ஐந்து நாடுகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலம்பெயர் தமிழர்களின் கடும் அழுத்தங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுவதாக சிங்களப் பத்திரிகையான திவயின தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தில் இருந்து விலகியதாக இலங்கை, ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு அறிவித்துள்ள போதிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீக்க முடியாது என ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு கூறியுள்ளது.

இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கவில்லை என்பதுடன் கண்காணிப்பு மட்டத்தில் செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கண்காணிப்பு மட்டத்தில் இருந்தும் விலகுவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: சுவிட்சர்லாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE