Wednesday 17th of April 2024 10:02:22 PM GMT

LANGUAGE - TAMIL
நெல்லியடி பொதுச்சந்தை
திறந்த முதல் நாளே மூடப்பட்டது நெல்லியடி பொதுச்சந்தை!

திறந்த முதல் நாளே மூடப்பட்டது நெல்லியடி பொதுச்சந்தை!


கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த நெல்லியடி பொதுச் சந்தை இன்று திறக்கப்பட்டிருந்த நிலையில் திறந்த அன்றே மூடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் நெருக்கமாக கூடும் பொதுச் சந்தைகள் மூடப்பட்டிருந்த நிலையில் பொதுச் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை நெல்லியடி பொதுச் சந்தையில் மரக்கறி விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பித்திருந்த நிலையில் பொதுச் சுகாதார நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படமாது மக்கள் நெருக்கமாக நின்று கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டதனால் நண்பகல் 12.00 மணியளவில் மூடப்பட்டுள்ளது.

பொதுச் சந்தை நடவடிக்கைகளை அவதானித்த பொதுச் சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாத காரணத்தினால் அங்கிருந்தவர்களை வெளியேற்றி சந்தையை மூடியுள்ளனர்.

இதையடுத்து வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையினருக்கும் பொதுச் சுகாதார பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், நெல்லியடி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE