Friday 29th of March 2024 05:38:22 AM GMT

LANGUAGE - TAMIL
விக்ரம்-துருவ்
விக்ரம்-60 திரைப்படத்தில் தந்தையும் மகனும் இணைந்து நடிக்கின்றனர்!

விக்ரம்-60 திரைப்படத்தில் தந்தையும் மகனும் இணைந்து நடிக்கின்றனர்!


விக்ரமின் 60வது படத்தில் அவரது மகன் துருவ் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆதித்ய வர்மா படம் மூலம் நடிகராக அறிமுகமான துருவ், அடுத்ததாக தந்தை விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் தந்தையும் மகனும் இரண்டாவது படத்தின் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் என கூறப்பட்டது.

இதனிடையே விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு இப்படத்தில் பவர்புல்லான ரோலாம்.

ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினி, விஜய் சேதுபதி என இரண்டு முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து வெற்றி கண்ட கார்த்திக் சுப்பராஜ், விக்ரம்-துருவ் இருவரையும் வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE