Friday 29th of March 2024 09:20:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
சீன தேசிய கீதத்தை அவமதிப்போருக்கு தண்டனை வழங்கும் சட்டம்   நிறைவேற்றம்!

சீன தேசிய கீதத்தை அவமதிப்போருக்கு தண்டனை வழங்கும் சட்டம் நிறைவேற்றம்!


சீன தேசிய கீதத்தை அவமதிப்போருக்கு தண்டனை வழங்கும் சட்டமூலம் ஹொங்கொங் சட்டமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

ஹொங்கொங் தொடா்பில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தம் கொண்டுவரும் சமிக்ஞையை பெய்ஜிங் வெளிப்படுத்திய சில நாட்களில் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சா்வதேச நிதி மையமான ஹொங்கொங்கின் சிறப்புரிமையை சீனாவின் தலையீடு அழித்துவிடும் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் கனடா மற்றும் சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளபோதும் இதனை சீனா கருத்தில் கொள்ளவில்லை.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் முதல் படியாகக் கருதப்படும் தேசிய கீதத்தை அவதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டமூலம் கருதப்படுகிறது.

ஹொங்கொங்கில் உள்ள ஜனநாயக ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பை மீறி சட்டசபையில் நேற்று இந்த சட்டமூலம் நிறைவேறியது.

புதிய சட்டத்தின் பிரகாரம் சீனாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் விதத்தில் நடந்துகொண்டால் அது குற்றச் செயலாகக் கருதப்படும். அத்துடன் தேசிய கீதத்தை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 6,450 டொலா் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

புதிய சட்டம் சீனாவின் தேசிய கீதத்தை இசைக்க ஹொங்கொங் பாடசாலை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குகிறது. மேலும் அதன் வரலாறும் சிறப்பும் எடுத்துரைக்கப்படவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்ச்சிகளில், நிறுவனங்களோடு தனிநபர்களும் தேசிய கீதத்துக்கு உரிய மதிப்பளித்துப் பாடவேண்டும்.

இந்த சட்டமூலம் அரைச் சமஷ்டி அதிகாரம் கொண்ட ஹொங்கொங்கை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சீனாவின் முயற்சியின் ஆரம்பமாகியுள்ளது என ஜனநாயக ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE