Tuesday 23rd of April 2024 05:28:21 AM GMT

LANGUAGE - TAMIL
நேத்ரா
ஏழ்மை நிலையிலும் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவிய சலூன் காரரின் மகள் ஐ.நா. நல்லெண்ணத் தூதராக தேர்வு!

ஏழ்மை நிலையிலும் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவிய சலூன் காரரின் மகள் ஐ.நா. நல்லெண்ணத் தூதராக தேர்வு!


தனது உயர்கல்விக்காக தந்தை சேகரித்து வைத்த தொகையை கொரோனாவால் பாதித்த மக்களுக்கு உதவி செய்வதற்கு செலவு செய்தமையை பாராட்டும் வகையில் மதுரை சலூன்காரரின் மகள் நேத்ரா ஐ.நா.நல்லெண்ணத் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரிய வருவதாவது,

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.

மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.

தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, உலகம், தமிழ்நாடு, மதுரை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE