Friday 29th of March 2024 10:01:41 AM GMT

LANGUAGE - TAMIL
அவள் அப்படித்தான்
42 ஆண்டுகளின் பின்பும் கதைக்களம் பொருந்துகிறது: அவள் அப்படித்தான் படத்தின் உரிமையை தேடும் இயக்குநர்!

42 ஆண்டுகளின் பின்பும் கதைக்களம் பொருந்துகிறது: அவள் அப்படித்தான் படத்தின் உரிமையை தேடும் இயக்குநர்!


42 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்திருந்த அவள் அப்படித்தான் திரைப்படத்தின் கதைக்களம் இன்றைய சூழலுக்கு பெருத்தமாக இருப்பதால் அதன் கதை உரியைத் தேடி அலைகிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

1978-ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்து, ருத்ரையா இயக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய படம், ‘அவள் அப்படித்தான்.’ 42 வருடங்களுக்கு முன்பு வந்த இந்த படத்தை மீண்டும் இயக்க முன்வந்து இருக்கிறார், டைரக்டர் பத்ரி வெங்கடேஷ். இவர், ‘பாணா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களை இயக்கியவர். ‘அவள் அப்படித்தான்’ படத்தை மீண்டும் இயக்க முன்வந்தது ஏன்? என்பது பற்றி இவர் கூறுகிறார்:

“அவள் அப்படித்தான் கதை இன்றைய சூழலுக்கு பொருந்துகிற கதை. ‘மீ 2’, ‘காஸ்ட்யூம் கவுச்’ போன்ற பிரச்சினைகள் பற்றி 42 வருடங்களுக்கு முன்பே பேசிய படம், இது. எனக்கு மிகவும் பிடித்த படம். பெண்ணியம்தான் படத்தின் கரு. பெண்ணியவாதியாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.

ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிம்பு, கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா, ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோர் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

“இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் பொருந்துகிற இந்த கதையை மீண்டும் படமாக்குவதை பெருமையாக கருதுகிறேன். ‘அவள் அப்படித்தான்’ கதையை படமாக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது? என்று தேடி வருகிறேன். அவரிடம் இருந்து உரிமையை வாங்கி விட்டால், அடுத்த கட்ட வேலையை பார்க்கலாம்” என்கிறார்இ டைரக்டர் பத்ரி வெங்கடேஷ்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE