Thursday 28th of March 2024 06:22:43 PM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலியா செல்வது குறித்து அவதானமாக  முடிவெடுக்குமாறு மாணவா்களை எச்சரிக்கிறது சீனா!

அவுஸ்திரேலியா செல்வது குறித்து அவதானமாக முடிவெடுக்குமாறு மாணவா்களை எச்சரிக்கிறது சீனா!


உயா் கல்விக்காக அவுஸ்திரேலேியாவுக்குச் செல்ல முடிவெடுக்கும் முன்னா் அது குறித்து ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்திக்குமாறு தனது நாட்டு மாணவா்களை சீனா இன்று செவ்வாய்க்கிழமை கோரியுள்ளது.

கோவிட்-19 தொற்று நோயை அடுத்து ஆசிய நாட்டவா்களை இலக்குவைத்து அவுஸ்திரேலியாவில் இனவாத செயற்பாடுகள் அதிகரித்து வருவதால் இந்த அறிவுறுத்தலை விடுப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

கல்விச் செயற்பாடுகளுக்காக அவவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ள மாணவா்கள் அல்லது கல்வியை மீண்டும் தொடா்வதற்காக செல்லவுள்ள மாணவா்கள் முன்னெச்சரிக்கையுடன் முடிவுகளை எடுக்க வேண்டும் என சீன கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகை நடத்திய ஒரு ஆய்வில் ஏப்ரல் 2 முதல் அவுஸ்திரேலியாவில் துஷ்பிரயோகம், மிரட்டல், துப்புதல் என்பன உட்பட 386 இனவெறி சம்பவங்களை இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவில் பரவிய கோவிட் -19 தொற்று எவ்வாறு உலகளாவிய தொற்றுநோயாக மாறியது? என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவுஸ்திரேலியா முன்வைத்துள்ளது. மேலும் தொற்று நோயின் பின்னணியில் அவுஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகும் பாா்லிக்கான வரியை சீனா அண்மையில் அதிகரித்துள்ளது. அத்துடன் அவுஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யவும் சீனா தடை விதித்துள்ளது. எனினும் இந்த நடவடிக்கைகள் கோவிட்-19 தொடா்பான சா்ச்சையின் பின்னணியில் எடுக்கப்படவில்லை என பெய்ஜிங் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹொங்கொங் விடயத்தில் சீனாவில் அணுகுமுறைகள் குறித்து அவுஸ்திரேலியா விமா்சித்து வருவதும் இரு நாடுகளுக்கு இடையிலான முறுகலுக்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE