;

Tuesday 7th of July 2020 06:04:34 AM GMT

LANGUAGE - TAMIL
சாஹித் அப்ரிடி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று!


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சாஹித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதி செய்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது.

வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. என் உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ் எனத் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாகிஸ்தானிலும் பரவி வருகிறது. உலகளாவிய கொரோனா பாதிப்பு அடிப்படையில் 15 வது இடத்தில் உள்ள பாகிஸ்தானில் தற்போது வரையில் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE