Thursday 25th of April 2024 02:15:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையின் சித்திரவதை முகாம்களின் வரைபடம் வெளியிடப்பட்டது!

இலங்கையின் சித்திரவதை முகாம்களின் வரைபடம் வெளியிடப்பட்டது!


கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் சித்திரவதைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இடங்கள் குறித்த வரைபடத்தை தயாரித்து சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான சர்வதேச நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான சர்வதேச நாளைக் குறிக்கும் முகமாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) மற்றும் இலங்கையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கான ஜனநாயக அமைப்பு (JDS) ஆகியன இணைந்து இலங்கையினுடைய முதலாவது சித்திரவதை வரைபடத்தை தயாரித்துள்ளன.

அந்த வரைபடமானது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இராணுவம், பொலிஸ் மற்றும் துணை ஆயுதப்படைகளினால் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை சித்திரவதை செய்வதற்காக தீவு முழுவதிலும் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் 219 இடங்களைக் குறித்துக் காட்டுகின்றது.

தீவு முழுவதிலும் இடம்பெற்றிருக்கும் சித்திரவதைகளின் முழு அளவினை தமது வரைபடம் படம் போட்டுக்காட்டவில்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) மற்றும் இலங்கையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கான ஜனநாயக அமைப்பு (JDS) என்ற அமைப்பும் தெரிவித்துள்ளன.

முதலாவது மற்றும் இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சியின் போது (ஜனதா விமுக்தி பெரமுன அல்லது மக்கள் விடுதலை முன்னணி) சித்திரவதை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் சாதாரணமாகவே அதிகமாக இருந்தமையால் அவை இங்கு உள்ளடக்கப்படவில்லை.

2006 – 19 வரை பெயரிடப்பட்ட இந்த இடங்கள் ITJP இன் சாட்சியங்கள் சேகரிப்பு செயற்திட்டத்தில் இருந்து பெறப்பட்டவையாக இருக்கின்ற அதேவேளையில் நிச்சயமாக அவை முழுமையானவையும் இல்லை.

ஆச்சரியமளிக்கும் வகையில் 80 களின் பிற்பகுதியில் சித்திரவதைக்காகப் பயன்படுத்தப்பட்ட கட்டடங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம் மற்றும் அரசால் நடத்தப்படும் லேக்கவுஸ் பத்திரிகையின் அடித்தளக் கட்டிடம் ஆகியனவும் உள்ளடங்குகின்றன.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் பெரும் எண்ணிக்கையிலான பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் என்பன மட்டுமல்லாது தொழிற்சாலைகள், பண்ணைகள், சினிமா தியேட்டா்கள், அரங்குகள் மற்றும் கோல்ஃப் விளையாடும் இடங்கள் என்பனவும் சித்திரவதை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

'1987 – 1989 காலப் பகுதியில் சிங்கள இளைஞர்களை மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்வதற்கும் கொலைகள் செய்வதற்கும் ஆயுதப்படையினரால் பயன்படுத்தப்பட்ட இந்த இடங்களில் பல ஞாபகத்தில் இருந்து அழிந்து விட்டன' என ஜனநாயகத்துக்கான இலங்கை ஊடகவியலாளர் அமைப்பின் பாசனா அபயவர்த்தன தெரிவித்தார்.

'ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த தார்மீக மனசாட்சி என்பது வெறுமனவே மக்கள் வழிமூலம் மட்டுமின்றி அந்த மக்கள் எவ்வாறு இறக்கின்றார்கள் மற்றும் எவ்வாறு அவர்கள் நினைவு கூரப்படுகின்றார்கள் என்பதிலுமே தோற்றம் பெறுகின்றது. உயிர் வாழ்பவர்கள் இறந்தவர்களை நினைவுகூராது விடும் போது சமூகமானது ஆபத்தான மறுப்புக்கு உட்படுவதுடன் அது மீள நிகழ்வதற்கான ஆபத்தும் உள்ளது'.

1989 இல் கேணல் கோத்தபாய ராஜபக்ச மாத்தளை மாவட்டத்திற்குப் பொறுப்பான இராணுவ இணைப்பதிகாரியாக இருந்தார். இவருடன் அவரது கஜபாகு படைப்பிரிவின் லெப்டினன்டுகளான சவேந்திர சில்வா (இப்பொழுது இராணுத் தளபதி), ஜகத் டயஸ் (முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பிரதானி) மற்றும் சுமத பெரேரா (இராணுவ அதிகாரிகளின் முன்னாள் பிரதி பிரதானி மற்றும் அண்மையில் ஒரு அமைச்சரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்) ஆகியோரும் இவருடன் இருந்தார்கள்.

ஜேவிபியின் காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான காணாமற்போன சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்த அரசாங்க விசாரணைக் குழுவொன்று மாத்தளை மாவட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளின் பெயரைக் கொண்ட ஒரு பட்டியலை தொகுத்து தயார் செய்தது. இந்தப் பெயர்களில் 'மாத்தளை இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்த ராஜபக்ச இனுடைய பெயரும் இருந்தது.

இந்தப் பட்டியல் ஒரு போதுமே வெளியிடப்படவில்லை. இதே இராணுவ அதிகாரிகள் பின்னர் 2009 இல் இடம்பெற்ற பாரிய சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்களுக்கு உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்படுகின்றது – சவேந்திர சில்வா ஜகத் டயஸ் போன்றவர்கள் வெளிப்படையாகவே அப்போதிருந்த இராணுவக்கட்டளை அமைப்பையும் தாண்டிச் சென்று கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கட்டளை மற்றும் அதிகாரத்தின் கீழ் 2009 இல் போரை நடத்துவதில் முக்கிய புள்ளிகளாக இருந்தார்கள். அவர்கள் 1989 இல் மாத்தளைக்கு அடுத்தாக உள்ள புத்தளத்தில் ஜேவிபியை நசுக்குவதில் ஈடுபட்டிருந்த கமால் குணரட்ணவுடன் இணைந்து பணியாற்றினார்கள்.

'ஜேவிபி இனது இரண்டாவது கிளர்ச்சியை நசுக்குவதில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் தண்டணையிலிருந்து முழுமையான பாதுகாப்புடன் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்ங்களிலும் தொடர்ந்தும் ஈடுபட்டார்கள்' என ஐ.ரி.ஜே.பி. நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

'1989 இல் இருந்து 2009 வரை இடம் பெற்ற மீறல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள் தொடர்பில் நீங்கள் ஒரு நேர்கோட்டை வரையலாம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் அரச அனுசரணையுடன் இடம்பெறுகின்றன என்பதுடன் அது அரச கொள்கையின் ஒரு முக்கிய கருவியாகவும் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் கொள்கையினை பாதுகாப்பு படைகளின் எல்லா மட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முழு அதிகாரமும் கட்டமைப்புக்களும் உள்வாங்கப்பட்டு முழுமையாகபட பயன்படுத்தப்படுகின்றன' என சூக்கா தெரிவித்தார்.

மேலும் மீறல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு கடந்த காலத்தில் இடம்பெற்றவைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு எல்லா பாதிக்கப்பட்டவர்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படும் ஒரு கலாச்சாரம் இல்லாது ஒழிக்கப்படவேண்டும்'.


Category: செய்திகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE