Friday 19th of April 2024 04:06:06 AM GMT

LANGUAGE - TAMIL
சோயிப் மாலிக்-சானியா மிர்சா
கொரோனாவால் பிரிந்திருந்த சோயிப் மாலிக்-சானியா மிர்சா தம்பதியர் 5 மாதங்களின் பின்னர் இணைகின்றனர்!

கொரோனாவால் பிரிந்திருந்த சோயிப் மாலிக்-சானியா மிர்சா தம்பதியர் 5 மாதங்களின் பின்னர் இணைகின்றனர்!


உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரிந்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் சோயிப் மாலிக் மற்றும் இந்தியாவின் பிரபல ரெனிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகிய இருவரும் 5 மாதங்களின் பின்னர் சந்திக்க உள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் சானியா மிர்சா 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

கொரோனா ஊரடங்கு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டபோது சோயிப் மாலிக் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் இருந்தார். அவரது மனைவி சானியாவும், குழந்தையும் ஐதராபாத்தில் உள்ளனர். விசா அனுமதியின்மை, விமானப் போக்குவரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக மனைவியையும் குழந்தையையும் பார்க்க முடியாமல் சோயிப் மாலிக் தவித்தார்.

இந்த நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தினரை சந்திப்பதற்காக சோயிப் மாலிக் இந்தியா செல்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இதற்கான அனுமதியை அவர் பெற்றுள்ளார்.

29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகிற 28- ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. சோயிப் மாலிக் மட்டும் இந்தியா சென்று விட்டு அங்கிருந்து ஜூலை 24-ந்தேதி இங்கிலாந்து சென்று அணியுடன் இணைந்து கொள்வார்.

குடும்பத்தினரை சந்திப்பதற்காக தனக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு அனுமதித்தது.

இதேபோல சோயிப் மாலிக் தாமதமாக இங்கிலாந்து வருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும ஒப்புக்கொண்டுள்ளது. சகலதுறை ஆட்டக்காரரான அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE