Saturday 20th of April 2024 08:35:15 AM GMT

LANGUAGE - TAMIL
உஷா ராணி
எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்!

எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்!


எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற உச்ச நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை உஷா ராணி உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை காலமானார்.

12 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய உஷா ராணி, எம்.ஜி.ஆருடன் பட்டிகாட்டு பொன்னையா, சிவாஜியின் என்னைப்போல் ஒருவன், கமல்ஹாசன் ஜோடியாக குமாஸ்தாவின் மகள் மற்றும் ஜக்கம்மா உள்பட தமிழில் 50 படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் பிரேம் நசீர், மது, சுகுமார் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

சென்னை அயப்பாக்கத்தில் வசித்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.

மறைந்த உஷா ராணியின் கணவர் என்.சங்கரன் நாயர் பிரபல மலையாள இயக்குனர் ஆவார். மலையாளத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த விஷணு விஜயம், பிரமிளா நடித்த தம்புராட்டி, பிரேம் நசீரின் ஒரு ஜென்மம் கூடி உள்பட 40 படங்களை இயக்கி உள்ளார். அவரை உஷா ராணி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சங்கரன் நாயர் 2005-ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகன் உள்ளார். உஷா ராணி மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE