Thursday 25th of April 2024 01:06:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி பசுமை பூங்காவில் இராணுவத்தினரால் 7200 ரூபா நாளாந்த வருமானம் பாதிப்பு; அ.வேழமாலிகிதன்!

கிளிநொச்சி பசுமை பூங்காவில் இராணுவத்தினரால் 7200 ரூபா நாளாந்த வருமானம் பாதிப்பு; அ.வேழமாலிகிதன்!


கிளிநொச்சி பசுமை பூங்காவில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் 7200 ரூபா நாளாந்த வருமானம் பாதிப்பு என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சயில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் 12 மணியளவில் கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் கூடும் இடங்கள் அரசாங்கத்தினால் மூடப்பட்டது. எனினும் பின்னர் சரணாலயங்கள், பூங்காக்களை திறப்பதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள பசுமை பூங்காவினை திறப்பதற்கான நடவடிக்கையை கரைச்சி பிரதேச சபை எடுத்திருந்தது. அப்பகுதியில் இராணுவம் நிலை கொண்டுள்ளமையால் குறித்த பூங்காவின் மூலம் கிடைத்த வருமானம் இல்லாது போயுள்ளது.

இராணுவத்தினர் பிரதான வாயிலை மறித்து தடைகளை அமைத்துள்ளனர். பூங்காவின் உட்பகுதியிலும் நடமாடுகின்றனர். இவ்வாறான நிலையில் மக்கள் அங்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். இதனால் நாளொன்றுக்கு ஒன்பதாயிரம் ரூபா வருமானமாக இருந்த குறித்த பூங்காவில் இன்று நாளொன்றுக்கு 800 ரூபா மாத்திரமே கிடைக்கின்றது.

இவ்விடயம் தொடர்பில் நான் இன்று சென்று அங்குள்ள இராணுவ பொறுப்பதிகாரியுடன் பேசினேன். அரச நிறுவனத்திற்கான வருமைானம் இதனால் இல்லாது போகின்றது. குறித்த முகாமை அகற்றி தருமாறு கேட்டிருந்தேன். அதற்கு நாமும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள்தான். நாம் இங்குதான் இருப்போம் என்ற வகையில் பதிலளித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பிரதேச சபை செயலாளர் ஊடாக குறித்த தரப்பினருக்கு பொறுப்பாக உள்ள இராணுவ பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினருக்கு கடிதம் ஒன்று எழுதுவதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை ஆனையிறவு முதல் இரணைமடு வரை படையினர் தையல் நிலையம் உள்ளிட்ட பிரத்தியேக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவற்றுக்கான அனுமதிகளை பெறுமாறு எம்மால் விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்பட்டன.

அவற்றை அவர்கள் எமக்கு திருப்பி அனுப்பி உள்ளனர். இலங்கையில் உள்ள அனைத்து அரச திணைக்களங்களும், நிர்வாக செயற்பாடுகளிற்கு ஒத்துழைக்க வேண்டும் என சட்ட ஒழுங்கு காணப்படும் நிலையில் அவர் இதன்போது தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE