Friday 19th of April 2024 09:13:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவில்  பன்றிகளைத் தாக்கும் மற்றொரு  புதிய வகை வைரஸ் குறித்து அச்சம்!

சீனாவில் பன்றிகளைத் தாக்கும் மற்றொரு புதிய வகை வைரஸ் குறித்து அச்சம்!


கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் சீனாவில் பன்றிகளிடையே பரவிவரும் ஒரு புதிய வகை வைரஸ் காய்ச்சல் சீன விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பன்றிகளிடையே பரவிவரும் G4 EA H1N1 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள வைரஸ் மனிதர்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனா்.

2009 உலகெங்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்திய பன்றிக் காய்ச்சல் (H1N1 swine flu) வைரஸை ஒத்ததாக இந்த வைரஸ் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனா்.

இது உடனடியான பிரச்சனை இல்லை என்றாலும் எதிா்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு.

அத்துடன் இதுவும் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனா்.

இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள தேவையான நோயெதிர்ப்புச் சக்தி இருக்காது.

இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை என்றாலும் இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE