Friday 29th of March 2024 01:35:35 AM GMT

LANGUAGE - TAMIL
-
463 வாக்காளர்கள் புத்தளத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது ; கா.காந்தீபன்!

463 வாக்காளர்கள் புத்தளத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது ; கா.காந்தீபன்!


ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான காரணங்களுக்காக தமது சொந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் 463 பேர் புத்தளத்தில் வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தினை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டதன் அடிப்படையில் 463 வாக்காளர்கள் புத்தளத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது எனமுல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் கா காந்தீபன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்கு சீட்டுகள் அடங்கிய பொதி அஞ்சல் அலுவலகத்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நாட்டில் இடம்பெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது முழுமையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையிலே ஆரம்பகட்ட குழுக்கள் தமது பணிகள் ஆரம்பித்து இருக்கிறது. முக்கியமாக முறைப்பாட்டு பிரிவு மற்றும் களஞ்சியபிரிவு உட்பட ஆரம்பகட்ட குழுக்கள் தங்களுடைய பணிகளை ஆரம்பித்து இருக்கின்றது. அந்த வகையிலே இன்றையதினம் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வாக்கு சீட்டு அடங்கிய பொதிகள் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையிலே 3508 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை மேற்கொண்டிருந்த நிலையில் 127 பேருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 3381 அஞ்சல் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கான வாக்கு சீட்டு அடங்கிய பொதிகள் இன்றைய தினம் தபால் நிலையத்திற்கு கையளிப்பதற்கு உரிய வகையில் மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு விநியோக நிலையத்தில் இருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அத்தோடு இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் 78360 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுக்கொண்டார்கள் அவர்களுக்கான வாக்களிப்புக்கள் 136 நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெற உள்ளது.

இதேவேளை மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே இம்முறை முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் வாக்கு என்னும் பணிகளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப் படுகின்றது.

அதே வேளை இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான காரணங்களுக்காக தமது சொந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் 463 பேர் புத்தளத்தில் வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தினை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டதன் அடிப்படையில் 463 வாக்காளர்கள் புத்தளத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE