;

Tuesday 14th of July 2020 08:59:43 AM GMT

LANGUAGE - TAMIL
-
தொற்று நோய் முடிவுக்கு வரும் அறிகுறியைக் கூட  காணவில்லை என்கிறது உலக சுகாதார அமைப்பு!

தொற்று நோய் முடிவுக்கு வரும் அறிகுறியைக் கூட காணவில்லை என்கிறது உலக சுகாதார அமைப்பு!


கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த நெருக்கடி முடிவுக்கு அருகில் கூட இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று நெருக்கடியால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 இலட்சத்துக்கு மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ள நிலையில் நம்பிக்கையை இழக்காது தொடா்ந்து போராட வேண்டும் எனவும் அவா் கூறினார்.

ஜெனீவாவில் இருந்தவாறு நேற்று இணைய நேரலையில் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசும்போதே அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்த புதிய வைரஸால் முழு உலகமும், மனிதா்களுடைய வாழ்க்கையும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்பதை நாம் யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை.

அதே சமயம் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் உலகெங்கிலும் நெகிழ்ச்சி, கண்டுபிடிப்பு, ஒற்றுமை போன்ற உணர்வுப்பூர்வமான செயல்களை நாம் கண்டோம்.

மற்றொரு புறம் தொற்றுநோயை பற்றிய களங்கம், தவறான தகவல் மற்றும் அரசியலாக்குவது போன்ற விடயங்களையும் காண முடிந்தது எனவும் அவா் கூறினார்.

இந்தத் தொற்று நோய் நெருக்கடி விரைவில் முடிவடைய வேண்டும். இயல்பு வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமுமாகும். ஆனால் யதார்த்தம் என்னவென்றால் தொற்று நோய் முடிவுக்கு அருகில் கூட இல்லை எனவும் அவா் கவலை வெளியிட்டாா்.

நாம் ஏற்கனவே நிறைய இழந்துவிட்டோம், ஆனால் நம்பிக்கையை இழக்க முடியாது. சமூகத்தை மேம்படுத்துவது, தொற்றைக் கட்டுப்படுத்துவது, உயிர்களைக் காப்பாற்றுவது, ஆராய்ச்சிகளை விரைவுபடுத்துவது மற்றும் நாம் அனைவரும் விரும்பும் பாதுகாப்பான, சிறந்த, பசுமையான மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குவதற்கான நேரம் இது எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினாா்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE