;

Tuesday 7th of July 2020 04:51:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
120 சட்டவிரோத துப்பாக்கிகள், ஆயுதங்கள்  நாடெங்கும் கடந்த 24 நாட்களில் சிக்கின!

120 சட்டவிரோத துப்பாக்கிகள், ஆயுதங்கள் நாடெங்கும் கடந்த 24 நாட்களில் சிக்கின!


நாடு முழுவதும் கடந்த ஜூன் 6 முதல் 30-ஆம் திகதி வரையான 24 நாட்களில் இடம்பெற்ற சோதனைகளின் போது 120-க்கும் மேற்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரி -56 துப்பாக்கிகள் - 11, ரி -81 ரக துப்பாக்கி ஒன்று, 12- பேர் துப்பாக்கிகள் (12- Bore guns) - 26, கைத்துப்பாக்கிகள் -3, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் -36, ரிவால்வர்கள் -46, 9 பிற துப்பாக்கிகள், வாள்கள் -3 உட்பட 122 ஆயுதங்களை பொலிஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை உடமையில் வைத்திருந்த 89 நபர்களை பொலிஸ் விசேட அணியினா் கைது செய்துள்ளனா்.

இவற்றைவிட 377 வெடிபொருள், 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 13 கைக்குண்டுகளை வைத்திருந்த 10 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, இந்த சோதனையின்போது மொத்தம் 7.14 கிலோ ஹெராயின், 295 கிலோ கஞ்சா போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் சோதனை நடவடிக்களின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடா்புடையதாகக் கருதப்படும் 4,413 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் குறித்த காலப்பகுதியில் 400, 000 லீட்டர் சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடா்பில் 198 போ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE