Thursday 25th of April 2024 06:56:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு: குமார் சங்கக்காரவும் விசாரணைக்கு அழைப்பு!

ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு: குமார் சங்கக்காரவும் விசாரணைக்கு அழைப்பு!


2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதான குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைக்கு இலங்கை அணியின் முன்னாள் முன்னணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு, அரவிந்த டீ சில்வா, உப்புல் தரங்க ஆகியோரைத் தொடர்ந்து இலங்கை அணியின் அப்போதைய தலைவர் சங்கக்காரவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு இலங்கை அணியின் அப்போதைய தலைவரும் முன்னாள் முன்னணி வீரருமான குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டீ சில்வா விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய நேற்று பி.பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் அமைந்துள்ள, விளையாட்டுத் தொடர்பில் தவறான விமர்சனங்களை விசாரணைக்கு உட்படுத்தும் பிரிவு அலுவலகத்தில் முன்னிலையாகியிருந்தார் அரவிந்த டீ சில்வா.

குறித்த விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த அரவிந்த டீ சில்வா ஐந்தரை மணித்தியாலங்களின் பின்னரே வெளியேறிச் சென்றிருந்தார்.

இதையடுத்து இலங்கை அணி வீரர் உப்புல் தரங்கவை இன்று காலை 9.00 மணிக்கு விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை விசாரணைக்கு முன்னிலையாகியிருந்த தரங்க சுமார் 2 மணி நேரங்கள் வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் குறித்த விசாரணைக்கு நாளை காலை 9.00 மணிக்கு முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE