Thursday 18th of April 2024 07:24:27 PM GMT

LANGUAGE - TAMIL
.
7 இலட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: ரைசியாவை பின் தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!

7 இலட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: ரைசியாவை பின் தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!


மொத்த தொற்று 7 இலட்சத்தை நெருங்கிய நிலையில் உலகளாவிய கொரோனா பாதிப்பு தரவரிசையில் ரைசியாவை பின் தள்ளிவிட்டு 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா.

உலகளாவிய கொரோனா பாதிப்பு தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ரைசியா 6 இலட்சத்து 81 ஆயிரத்து 251 தொற்றுகளுடன் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை ரைசியாவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 10 ஆயிரத்து 161 ஆக உள்ளது.

காலை 8.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 298 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் 425 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 97 ஆயிரத்து 413 ஆக அதிகரித்து ஏழு இலட்சத்தை நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 425 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 693 ஆக அதிகரித்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது

அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 2 இலட்சத்து 6 ஆயிரத்து 619 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 8 ஆயிரத்து 822 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அடுத்ததாக தமிழ்நாட்டில் 1 இலட்சத்து 11 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 1510 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு புது டெல்லியில் 3 ஆயிரத்து 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 99 ஆயிரத்து 444 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குஜராத்திலும் ஆயிரத்து 943 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 ஆயிரத்து 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை 4 இலட்சத்து 24 ஆயிரத்து 432 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 2 இலட்சத்து 53 ஆயிரத்து 287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதலிடத்தில் 29 இலட்சத்து 82 ஆயிரத்து 928 தொற்றுகளுடன் அமெரிக்க முதலிடத்திலும், 16 இலட்சத்து 4 ஆயிரத்து 585 தொற்றுகளுடன் பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE