Thursday 25th of April 2024 08:40:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
தங்கள் தலைவரின் சடலத்தைப் பெறுவதற்காக  6 பேரை கடத்திய அமேசான் பழங்குடியினா்!

தங்கள் தலைவரின் சடலத்தைப் பெறுவதற்காக 6 பேரை கடத்திய அமேசான் பழங்குடியினா்!


கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி இரண்டு இராணுவத்தினா் உள்ளிட்ட 6 பேரை ஈக்வடார் நாட்டில் உள்ள அமேசான் பழங்குடிகள் கடத்திச் சென்றனா்.

தங்கள் தலைவரின் உடலை பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்வதற்காக தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே கடத்தப்பட்ட 6 பேரையும் விடுவிக்க முடியும் என ஷுவார் குமய் என்ற குழுவைச் சோ்ந்த பழங்குடியினா் உறுதியாகக் கூறிவிட்டனா்.

இதனையடுத்து புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னரே பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ருந்த 6 பேரையும் பழங்குடியினா் விடுவித்தனா்.

பிரேசில், ஈக்வடார் உள்ளிட்ட அமேசான் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இங்குள்ள மழைக்காடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஈக்வடார் நாட்டின் குமே என்ற பகுதியில் வசித்து வரும் அமேசான் பழங்குடியின மக்களின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு கடந்த மே மாத இறுதியில் உயிரிழந்தார்.

உயிரிழந்த தலைவரின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமேசான் பழங்குடியினர் கோரிக்கை விடுத்துவந்தனா்.

ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரை கொரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்யும் நடைமுறைப்படி அடக்கம் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈக்வடார் நாட்டை சேர்ந்த 2 இராணுவத்தினர், 2 பொலிஸார் மற்றும் 2 பொதுமக்கள் என 6 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.

இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய அதிகாரிகள் தரப்பில் இருந்து பழங்குடியின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையில் தங்கள் தலைவரின் உடலை தந்தால் மட்டுமே பணயக் கைதிகளை விடுதலை செய்வோம் என பழங்குடியின மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வேறு வழியின்றி கொரோனாவால் உயிரிழந்து புதைக்கப்பட்ட பழங்குடியின தலைவரின் உடலை தோண்டி எடுக்கப்பட்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் அம்மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தங்கள் தலைவரின் உடலை பெற்றுக்கொண்டபின்னரே பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 6 பேரையும் பழங்குடியினர் விடுதலை செய்தனா்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE