Saturday 20th of April 2024 08:48:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை  முழுமையாக அமுல்படுத்த வேண்டும்; கிரியெல்ல

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்; கிரியெல்ல


"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும். தீர்வு விடயத்தில் இதற்கு அப்பால் செல்லமாட்டோம்."

- இவ்வாறு முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

13 பிளஸ் என அன்று கூறிய மஹிந்த ராஜபக்ச, இன்று வாக்குகளுக்காக அதிகாரப்பகிர்வு தொடர்பில் வீண் அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றார் எனவும் கிரியெல்ல குற்றஞ்சாட்டினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் விடுக்கப்பட்ட விசேட அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டின் அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கமாகும். இதுவே தீர்வு திட்டத்துக்கான எமது உறுதிமொழியாகவும் இருக்கின்றது. அதிகாரப்பகிர்வை நாம் ஏற்கின்றோம் - அனுமதிக்கின்றோம்.

குறிப்பாக 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்கள் போதாது, அதற்கு அப்பால் (13 பிளஸ்) செல்லவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச அன்று கருத்து வெளியிட்டிருந்தார். நாம் 13 பிளஸ் பற்றி பேசவில்லை. 13இல் உள்ள அதிகாரங்கள் முழுமையாகப் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தோம். வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல ஏனைய மாகாணங்களுக்கும் இந்த அதிகாரப்பகிர்வு கோட்பாடு பொருந்தும்.

தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புமூலம் ஆளுங்கட்சிக்கு (113) சாதாரண பெரும்பான்மைகூட கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்துவிடும் என ஆளுந்தரப்பு அஞ்சுகின்றது. இந்தப் பயம் காரணமாகவே இனவாதம் பேசி வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக சஜித் பக்கமே இனவாதிகள் உள்ளனர் எனப் பரப்புரை முன்னெடுக்கப்படுகின்றது" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE