Friday 19th of April 2024 04:44:21 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்ட 442 பேரின் கொரோனா முடிவுகள் வெளியாகின!

யாழ். ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்ட 442 பேரின் கொரோனா முடிவுகள் வெளியாகின!


யாழ் போதனா வைத்தியாசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 442 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

இன்று பி.பகல் 4.00 மணி வரையான கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியாசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 442 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இவ்வாறு பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 442 பேரின் விபரங்கள் வருமாறு,

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 2 பேர்

போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்

தனிமைப்படுத்தல் மையம் பெரியகாடு - 92 பேர்

இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் வவுனியா - 2 பேர்

தனிமைப்படுத்தல் மையம் முழங்காவில் – ஒருவர்

பொது வைத்தியசாலை முல்லைத்தீவு - 3 பேர்

தனிமைப்படுத்தல் மையம் பம்பைமடு - 96 பேர்

ஆதாரவைத்தியசாலை தெல்லிப்பளை – ஒருவர்

தனிமைப்படுத்தல் மையம் இயக்கச்சி - ஒருவர்

55 படைப் பிரிவு இயக்கச்சி - ஒருவர்

பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்

ஆதாரவைத்தியசாலை சாவகச்சேரி – ஒருவர்

ஆதாரவைத்தியசாலை ஊர்காவற்துறை – ஒருவர்

பொது வைத்தியசாலை மன்னார் - 20 பேர்

பருத்தித்துறை பிரதேச எழுமாற்றுத் தெரிவு - 20 பேர்

தனிமைப்படுத்தல் மையம் இயக்கச்சி -71 பேர்

இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் பலாலி - 100 பேர்

தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு - ஒருவர்

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 21பேர்

ஆதாரவைத்தியசாலை பருத்தித்துறை – 3பேர்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE