Saturday 20th of April 2024 01:40:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
35 இலங்கையா்கள் மத்திய கிழக்கு  நாடுகளில் கொரோனாவுக்குப் பலி!

35 இலங்கையா்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவுக்குப் பலி!


மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்த இலங்கையா்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவா்கள் அனைவரும் வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றவா்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் மங்கள ரந்தனிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளாா்.

இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழந்த 35 இலங்கையா்களில் 33 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாக அவா் கூறியுள்ளாா்.

சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், ஓமான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.

இறந்தவர்களின் சடலங்கள் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி அந்தந்த நாடுகளில் தகனம் செய்யப்பட்டுவிட்டதாகவும் மங்கள ரந்தனிய தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மத்திய கிழக்கில் சிக்கித் தவிக்கும் பெருமளவு இலங்கையர்கள் தாம் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்துமாறு இலங்கை அரசைக் கோரியுள்ளனா்.

மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இலங்கையா்கள் பெரும்பான்மையானோா் கோவிட்-19 நெருக்கடியால் தமது வேலைகளை இழந்துள்ளனா். இதனால் பலா் அன்றாட உணவுக்குக் கூட வழியின்றித் தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, வெளிநாடுகளில் சிக்கியிருந்த 15,000 போ் இதுவரை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனா். மேலும் சுமாா் 30 ஆயிரம் வரையான இலங்கையா்கள் நாடு திரும்புவதற்கு எதிா்பாா்த்து வெளிநாடுகளில் காத்திருப்பதாகவும் தெரியவருகிறது.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE