Tuesday 16th of April 2024 01:54:35 AM GMT

LANGUAGE - TAMIL
-
கடும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன்  சிங்கப்பூா் பொதுத் தோ்தல் வாக்களிப்பு ஆரம்பம்!

கடும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிங்கப்பூா் பொதுத் தோ்தல் வாக்களிப்பு ஆரம்பம்!


கொவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் சிங்கப்பூரின் 14 ஆவது நாடாளுமன்றத் தோ்தல் இன்று வெள்ளிக்கிழமை கடும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆரம்பமாகியது.

இன்றைய தோ்தலில் 93 பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக 2.65 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

குடியிருப்புகளின் கீழுள்ள வெற்றுத் தளங்கள், சுற்றுப்புறக் கூடாரங்கள், பாடசாலைகள், சமூக மன்றங்கள் போன்ற இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் உடல்வெப்பநிலை சோதிக்கப்படுவது, பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றுக்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு இடையிலான தொடர்பைக் குறைக்கும் நோக்குடன் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 880லிருந்து 1,100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையமும் சராசரியாக 2,400 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னைய தோ்தல்களில் இந்த 3,000 ஆக இருந்தது.

37.5 டிகிரி செல்சியசுக்கும் மேல் காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப்படும் வாக்காளர்கள், இரவு 7 முதல் 8 மணி வரை அவா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட வாக்களிப்பு நேரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தோ்தலில் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்குச் சீட்டைப் பெறுவதற்கு முன்பு தொற்று நீக்கி கொண்டு கைகளைச் சுத்திகரிப்பதுடன், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தத் தேர்தலில் 6,570 சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக சிங்கப்பூா் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: சிங்கப்பூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE