Tuesday 23rd of April 2024 01:17:33 PM GMT

LANGUAGE - TAMIL
.
முதல் இனிங்கில் 114 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது மே.இந்திய தீவுகள் அணி!

முதல் இனிங்கில் 114 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது மே.இந்திய தீவுகள் அணி!


இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 114 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி முதல் இனிங்சுக்காக பெற்ற 204 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதலாவது இனிங்சை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 318 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

102 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் 114 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிராத்வெயிட் 65 ஓட்டங்களையும், டௌவ்ரிச் 61 ஓட்டங்களையும் பெற்று அரைச் சதம் கடந்து ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் பென் ஸ்ரோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தனர்.

114 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 7 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்களை பெற்று ஆடிவருகிறது.

தற்போது 103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்டத்தில் எஞ்சியுள்ள 6 ஓவர்களையும் விக்கெட் இழப்பின்றி எதிர்கொள்ளும் வகையில் கவனமாக ஆடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE