Thursday 28th of March 2024 03:33:48 PM GMT

LANGUAGE - TAMIL
.
4 நாட்களில் ஒரு இலட்சம் தொற்று: இந்தியாவில் 8 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

4 நாட்களில் ஒரு இலட்சம் தொற்று: இந்தியாவில் 8 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!


இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நான்கு நாட்களில் ஒரு இலட்சத்தை கடந்துள்ளதை அடுத்து மொத்த தொற்று 8 இலட்சத்தை தாண்டியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நேற்றைய தினம் 26 ஆயிரத்து 506 ஆக இருந்ததையடுத்து மொத்த தொற்று 7 இலட்சத்து 93 ஆயிரத்து 802 ஆக அதிகரித்திருந்தது.

இந்நிலையில் இன்றும் 27 ஆயிரத்து 114 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்து 8 இலட்சத்து 20 ஆயிரத்து 916 ஆக உயர்வடைந்துள்ளது.

7 இலட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நான்கே நாட்களில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தொற்று உறுதியானதையடுத்து 8 இலட்சத்தை கடந்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 519 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களது எண்ணிக்கை 22 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 2 இலட்சத்து 38 ஆயிரத்து 461 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 9 ஆயிரத்து 893 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அடுத்ததாக தமிழ்நாட்டில் 1 இலட்சத்து 30 ஆயிரத்து 261 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 1829 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு புது டெல்லியில் 3 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1 இலட்சத்து 9 ஆயிரத்து 140 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குஜராத்திலும் 2 ஆயிரத்து 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 386 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 2 இலட்சத்து 83 ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, புது தில்லி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE