Tuesday 23rd of April 2024 05:14:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவால் கிட்டத்தட்ட 4 இலட்சம்  தனியார் துறையினர் இலங்கையில் வேலையிழப்பு!

கொரோனாவால் கிட்டத்தட்ட 4 இலட்சம் தனியார் துறையினர் இலங்கையில் வேலையிழப்பு!


கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் இலங்கையில் தனியார் துறைகளைச் சோ்ந்த சுமார் 3 இலட்சத்து 82 ஆயிரத்து 537 போ் வேலை இழந்துள்ளதாக தொழில் திணக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மே மாதம் நடத்திய ஆய்வில் 2,536 தனியார் நிறுவனங்களில் 1,350 நிறுவனங்கள் தொற்று நோயை அடுத்து மூடப்பட்டது தெரியவந்ததாக தொழில் திணைக்களம் தெரிவி்த்துள்ளது.

இவற்றின் 1,105 தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட திறனுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

81 தனியார் நிறுவனங்கள் மட்டுமே தொற்று நோய் நெருக்கடியிலும் முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 1,084 முதலீட்டாளர்களால் சுமார் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 702 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE