;

Thursday 6th of August 2020 06:54:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது மே.இந்தியத் தீவுகள்!

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது மே.இந்தியத் தீவுகள்!


இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ரெஸ்ட் தொடரில் விளையாடிவரும் மே.இந்தியத் தீவுகள் அணி முதலாவது ரெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விளையாட்டுகள் அனைத்தும் தடைப்பட்டுள்ள நிலையில் நடைபெறும் முதலாவது போட்டித் தொடர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.

மே.இந்தியத் தீவுகள் அணி முன்னிலை பெற்ற 114 ஓட்டங்களுக்கு பதிலளித்து தனது இரண்டாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 313 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கிரௌலி 76 ஓட்டங்களையும், சிப்லி 50 ஓட்டங்களையும், ஸ்டோக்ஸ் 46 ஓட்டங்களையும், பேர்ன்ஸ் 42 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

பந்துவீச்சில் கப்ரியல் 5 விக்கெட்டுக்களையும், காஷ் மற்றும் ஜோசெப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

இதையடுத்து 199 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மே.இந்தியத் தீவுகள் அணிக்கு அதிர்ச்சியளித்தார் ஆர்ச்சர்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிராத்வெயிட்டை 4 ஓட்டங்களுடனும், ப்ரூக்சை ஓட்டமெதுவும் பெறாதும் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றியிருந்தார் ஆர்ச்சர். 27 ஓட்டங்களை பெறுவதற்குள் முன்னணி வீரர்கள் மூவரின் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது மே.இந்தியத் தீவுகள் அணி.

பின்னர், ரோஸ்டனுடன் ஜோடி சேர்ந்த பிளாக்வுட் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். ரோஸ்டன் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால், நிலைத்து நின்று ஆடிய பிளாக்வுட் 154 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 95 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இறுதியில், 6 விக்கெட்டுகளை இழந்த மே.இந்தியத் தீவுகள் அணி வெற்றி இலக்கான 200 ஓட்டங்களை எட்டியது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மே.இந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

இரண்டு இனிங்சிலும் சேர்த்து 137 ஓட்டங்களை கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய மே.இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் கேப்ரியல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் மே.இந்தியத் தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE