;

Tuesday 11th of August 2020 09:55:15 AM GMT

LANGUAGE - TAMIL
-
முகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி!

முகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி!


ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பஸ்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பஸ்களில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வகையில் செயற்படும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறு பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

முகக்கவசம் அணிந்து வருவோரை மாத்திரம் அனுமதிக்குமாறும் நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், அனைத்து பஸ் நிலையங்களிலும் 24 மணித்தியாலங்களிலும் கிருமித்தொற்று ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய பொதுமக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE