Thursday 25th of April 2024 08:40:16 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் இன்றும் அதிகூடிய தொற்று: மொத்த தொற்று 1 இலட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது!

தமிழ்நாட்டில் இன்றும் அதிகூடிய தொற்று: மொத்த தொற்று 1 இலட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது!


தமிழ்நாட்டில் இன்றும் அதிகூடிய தொற்று பதிவாகியுள்ள நிலையில் இதுவரையான மொத்த தொற்று ஒரு இலட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று தமிழ்நாட்டில் புதிதாக 4 ஆயிரத்து 538 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொதத்த தொற்று 1 இலட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இன்று 79 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றும் ஆயிரத்து 243 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 83 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 10 ஆயிரத்து 807 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 47 ஆயிரத்து 782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE