Friday 29th of March 2024 02:50:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
வைரஸ்களை அழிக்கும் மஞ்சள்;  சீனா ஆய்வாளா்கள் தெரிவிப்பு!

வைரஸ்களை அழிக்கும் மஞ்சள்; சீனா ஆய்வாளா்கள் தெரிவிப்பு!


வைரஸ்களை அழிக்கும் வல்லமை மஞ்சளுக்கு இருப்பதாக சீனாவின் வுஹான் - பொறியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) என்ற ஒரு வேதிப் பொருள் சில வைரஸ்களை அழிக்க உதவுகிறது.

மஞ்சளின் நிறத்துக்கு காரணமான இந்த வேதிப்பொருள் TGEV (transmissible gastroenteritis virus) என்ற பன்றிகளை தாக்கும் கொரோனா வைரஸை அழிக்கும் திறமை கொண்டது என சீனாவில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

TGEV வைரஸை பல வழி களில் இந்த மஞ்சளில் உள்ள குர்குமின் வேதிப்பொருள் அழிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு செல்லுக்குள் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு அதனை கொல்லுதல் ஆற்றல் குர்குமினுக்கு உள்ளது எனவும் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனர்.

TGEV வைரஸை செயலிழக்க வைப்பதில் குர்குமின் அதிக அளவில் செயலாற்றுகிறது. டெங்கு வைரஸ், ஹெபடைட்டிஸ் பி (hepatitis B), ஜிகா வைரஸ் போன்ற வைரஸ்களின் நகலெடுப்புகளையும் இந்த குர் குமின் தடுக்கிறது என சீனாவிலுள்ள வுஹான் உயிரியல் பொறியியல் நிறுவன ஆராய்ச்சியாளர் டாக்டர் லிலன் ஜி தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE