Friday 19th of April 2024 10:15:27 PM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 7 ஆயிரம் புதிய தொற்று: 2 இலட்சத்தை கடந்தது மொத்த தொற்று!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 7 ஆயிரம் புதிய தொற்று: 2 இலட்சத்தை கடந்தது மொத்த தொற்று!


தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் புதிய தொற்றுகள் இனம் காணப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்று 2 இலட்சத்தை கடந்துள்ளது.

சற்று முன்னதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்பயைடில் இன்று (ஜூலை-25) தமிழ்நாட்டில் புதிதாக 6 ஆயிரத்து 988 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளதன் மூலம் மூன்றாவது நாளாக ஆறாயிரத்தை கடந்த தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொதத்த தொற்று 2 இலட்சத்து 6 ஆயிரத்து 737 ஆக உயர்வடைந்து 2 இலட்சத்தை கடந்துள்ளது.

இதேவேளை இன்று 89 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 3409 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றும் ஆயிரத்து 329 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 93 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 51 ஆயிரத்து 55 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 52 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE