Saturday 20th of April 2024 09:20:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து  பீஜிங்கில் திரையரங்குகளை திறக்க அனுமதி!

கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து பீஜிங்கில் திரையரங்குகளை திறக்க அனுமதி!


சீனத் தலைநகா் பீஜிங்கில் பரவிய கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக பீஜிங்கில் உள்ள திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தலைநகா் பீஜிங்கிலுள்ள ஜின்பாடி மொத்த உணவு விற்பனைச் சந்தையிலிருந்து கடந்த மாதம் கொரோனா தொற்று பரவியது. எனினும், நகர அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கானவா்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதன் மூலம் அந்த நோய் மீண்டும் தலையெடுக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், பீஜிங்கிலுள்ள திரையரங்குகள் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளன. திரைப்படங்களுக்கு செல்பவா்கள் அதற்காக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், திரைக்காட்சிகளின்போது உணவுப் பொருள்கள், பானங்கள் அருந்தக் கூடாது. தகுந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், திரையரங்குகளின் மொத்த இருக்கைத் திறனில் 30 வீத அளவுக்கு மட்டுமே ரசிகா்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE