Tuesday 23rd of April 2024 09:39:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் மீது சுமத்தப்பட்ட  7 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி எனத் தீா்ப்பு!

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் மீது சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி எனத் தீா்ப்பு!


மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் மீது சுமந்தப்பட்ட நிதி முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

1MDBயின் துணை நிறுவனமான எஸ்.ஆர்,சி இண்டர்நனல் சென். பெர்ஹாட்டிற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டை முறைகேடு செய்த 3 குற்றச்சாட்டுக்கள் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான இதர மூன்று குற்றச்சாட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு எதிரான 7 குற்றச்சாட்டுக்களையும் அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிருபித்துள்ளது.

எனவே நஜீப் இந்த ஏழு குற்றங்களையும் புரிந்துள்ளார் என கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஷாலி இன்று தீர்ப்பளித்தார்.

முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக மேல் முறையீடு செய்வதற்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என நஜீப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா கேட்டுக்கொண்டார். எனினும் இந்த கோரிக்கைக்கு அரசு தரப்பின் முதிர் நிலை வழக்கறிஞரான டத்தோ வி.சிதம்பரம் ஆட்சேபம் தெரிவித்தார்.

தண்டனை விதிக்கப்பட்ட பின்னரே மேல் முறையீடு செய்வதற்கான வாதத் தொகுப்பை சமர்ப்பிக்க முடியுமே தவிர தண்டனை விதிப்பதற்கு முன்னதாகவே நீதிமன்ற நடவடிக்கையை ஒத்திவைக்கும்படி கோரிக்கை விடுக்க முடியாது என சிதம்பரம் வாதிட்டார்.

2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை நாட்டின் பிரதமராக நஜீப் பதவியில் இருந்துள்ளார். நம்பிக்கை மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாட்டின் முதலாவது பிரதமர் நஜீப் ஆவார்.

தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் அவருக்கு எதிராக 3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்கள், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தியதாக 2018ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டது.

மூன்று அம்பாங் இஸ்லாமிய வங்கி கணக்குகளில் போடப்பட்ட பணம் நஜீப்பிற்கு தெரியும் என்ற ஆதாரம் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்நோக்கத்தோடு இந்த விவரங்களை அவர் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை என நீதிபதி சுட்டிக்காட்டினார். எஸ்.ஆர்.சி இண்டர்றநஷனல் அல்லது நஜீப் அம்பாங் இஸ்லாமிய பொருளகத்திற்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றங்களிலும் எதிர்தரப்பு சந்தேகத்தை எழுப்பத் தவறிவிட்டதாகவும் நீதிபதி கூறினார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலும் நஜீப், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவியை பயன்படுத்தி அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் ஊழல் புரிந்துள்ளார். அதோடு ஓய்வூதிய நிதியிலிருந்து எஸ்.ஆர்.சி இண்டர்நேசனல் நிறுவனத்திற்கு கடன்களுக்கான 400 கோடி ரிங்கிட் அரசாங்க உத்தரவாதத்தையும் நஜீப் வழங்கியுள்ளார் என்பதையும் அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்திருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் திகதிக்கும் 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகக்குமிடையே புத்ரா ஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் இக்குற்றத்தை புரிந்துள்ளார் எனவும் ஆதரங்களில் இருந்து தெரியவருவதாகவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டார்.


Category: உலகம், புதிது
Tags: மலேசியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE