Thursday 18th of April 2024 01:05:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஹொங்கொங்கில் அதிகரித்து வரும் கொரோனா;  சமூகத் தொற்றின் விளிம்பில் உள்ளதாக எச்சரிக்கை!

ஹொங்கொங்கில் அதிகரித்து வரும் கொரோனா; சமூகத் தொற்றின் விளிம்பில் உள்ளதாக எச்சரிக்கை!


ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கட்­டாய முகக்­க­வ­சம் மற்­றும் உண­வ­கங்­களில் அமர்ந்து உணவருந்த தடை உள்­ளிட்ட புதிய கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தகைய கட்­டுப்­பா­டு­களை மீறு­வோ­ருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்­கப்­ப­டலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்தால் நோயா­ளி­க­ளைக் கையாள்­வ­தில் மருத்­துவ அமைப்பு திண­றக்­கூ­டும். அதிக உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என ஹொங்கொங் அரசியல் தலை­வர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.

ஆரம்­ப­க்கட்டத்தில் தொற்று பர­வல் கட்­டுப்­பாட்­டில் வெற்றி கண்ட ஹொங்கொங்கில் கடந்த சில வாரங்­க­ளாக தினசரி 100-க்கும் மேற்­பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகி வருகின்றனர்.

நேற்று 106 புதிய தொற்று நோயாளா்கள் பதிவாகினர். அவற்­றில் 98 போ் உள்ளூரில் பாதிக்கப்பட்டவா்களாவர்.

இந்நிலையில் ஹொங்கொங் சமூகத் தொற்று ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக ஹொங்கொங் அரசியல் தலை­வர் கேரி லாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே மக்­கள் சமூக இடை­வெ­ளியை கடை­ப்பி­டிக்க வேண்­டும் என்­றும் முடிந்­த­வரை வீட்­டி­லேயே இருக்­கு­மா­றும் அவர் வலியுறுத்­தி­னார்.

இதேவேளை, தனி­மைப்­ப­டுத்­தல் மையங்கள் நிரம்பி வரு­வ­தால், விமான நிலை­யத்­திற்கு அருகே 2,000 தற்­கா­லிக படுக்­கை­கள் கொண்ட மருத்­து­வ­ம­னையை கட்­ட­வுள்­ளதாக ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு உதவ சீனா முன்வந்துள்ளது எனவும் அவா்கள் கூறியுள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE