Thursday 18th of April 2024 07:38:05 AM GMT

LANGUAGE - TAMIL
.
சென்னையில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா தமிழ்நாட்டில் 4 ஆயிரம் பேரை பலியெடுத்தது!

சென்னையில் ஒரு இலட்சத்தை கடந்த கொரோனா தமிழ்நாட்டில் 4 ஆயிரம் பேரை பலியெடுத்தது!


சென்னையில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்களை தொற்றிய கொரோனா தமிழ்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களது உயிர்களை பறித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2.5 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று!

தமிழ்நாடு சுகாதார அமைச்சு இன்று பி.பகல் (ஓகஸ்ட்-01) வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 879 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளனர்.

இதையடுத்து மொதத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 2 இலட்சத்து 51 ஆயிரத்து 738 ஆக உயர்வடைந்துள்ளது.

4 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு!

இதேவேளை இன்று 99 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையான உயிரிழப்புகளில் அதிகூடிய உயிரிழப்பு பதிவான நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பும் 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் ஒரு இலட்சத்தை கடந்த தொற்று!

சென்னையில் இன்று ஆயிரத்து 74 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று ஒரு இலட்சத்து 877 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 1 இலட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 56 ஆயிரத்து 738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE