Thursday 28th of March 2024 11:17:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா வைரஸ் தடுப்பூசியை  ஒக்டோபரில்  பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் தயாராகிறது ரஷ்யா!

கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஒக்டோபரில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் தயாராகிறது ரஷ்யா!


ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்

பெருமளவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தச் சுகாதார அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறியுள்ளதாக ஒரு ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மாதம் நடுப்பகுதியில் ஒப்புதல் வழங்கும் தடுப்பூசி ஆய்வுக் குழுவினரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மொஸ்கோவில் உள்ள கமலே நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டது. அதை பதிவு செய்வதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்` என சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறியுள்ளார் என இன்டர்பொக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் பெருந்திரளான மக்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்த உள்ளோம். மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்`` எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளதாகவும், தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொண்ட பரிசோதனையில் தாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது எனவும் கடந்த மாதம் ரஷ்யா அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE