Friday 29th of March 2024 09:20:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழர்களிடையே ஒற்றுமையின்மையால் கிழக்கைத் தொடர்ந்து வன்னியும் பறிபோகும் அபாயம் உள்ளது!

தமிழர்களிடையே ஒற்றுமையின்மையால் கிழக்கைத் தொடர்ந்து வன்னியும் பறிபோகும் அபாயம் உள்ளது!


தமிழர்களிடையே ஒற்றுமையின்மையால் கிழக்கைத் தொடர்ந்து வன்னியும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பிரதேசத்தில் தமிழர்களின் தனித்துவத்தினை இல்லாதொழிப்பதற்காக தமிழர்கள் தங்களது அடையாளத்துடன் வாழக்கூடாது என்பதற்காக சிங்கள மக்களை குடியேற்றி வருகின்றார்கள்.

இதன் காரணமாக கிழக்கு மாணாகத்தில் தமிழர்களுக்டைய காணிகள் பறிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். குடியேற்றப்பட்டதுடன் மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் தொல்பொருள் செயலணியை உருவாகுகின்றார்.

ஆகவே வன்னியிலும் இந் நிலை உருவாகி வருகின்றது. இங்கு சிங்கள முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை வரமுடியாமல் செய்ய முடியும். இது ஏன் எமக்கு இன்னும் விளங்கவில்லை.

2015 ஆம் ஆண்டு ரிசாட் பதியுர்தீனுக்கும் மஸ்தானுக்கும் இருபதனாயிரம் தமிழர்கள் வாக்களித்தார்கள். அவர்கள் மீண்டும் உங்களை நாடி வரும் போது ஏன் அபிவிருத்தி செய்யவில்லை என கேட்பதில்லை.

சாளம்பைக்குளம் எப்படி உருவாக்கப்பட்டது. ரிசாட் பதியுர்தீனுக்கு அரசியல் பலத்தினை கொடுத்தது யார்? தமிழர்கள் வாக்களிக்காமல் ரிசாட்டாலும் மஸ்தானாலும் வெல்ல முடியாது. அது எமக்கு விளங்குவதில்லை.

இந்த மண்ணில் பல தமிழ் மன்னர்களின் பரம்பரையில் வந்த இனம் எங்கள் தமிழ் இனம். ஆனால் இன்று நாங்கள் சின்ன சின்ன விடயங்களுக்காக எங்களை அழிப்பவர்களுக்காக அதிகாரத்தினை கொடுக்கின்றோம்.

வன்னி மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது. கிழக்கை எவ்வாறு மகாவலி மூலம் அழித்தார்களோ அதைப்போலவே வன்னியில் தமிழர்களின் இனப்பரம்பலை இல்லாதொழிக்கப் பார்க்கின்றார்கள்.

இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ன செய்தது என கேட்கின்றனர். வன்னியில் என்ன நடக்கின்றது என் தெரியாதவர்கள் கூட்டமைப்பில் இருந்து சென்றவர்கள் இதனை கேட்கின்றனர். அது அவர்கள் தங்களையே பார்த்து கேட்கவேண்டிய கேள்வி.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் அபிவிருத்தி நடக்கும். நான் என்னால் முடிந்த அபிவிருத்தியை செய்திருக்கின்றேன். ஆனால் அபிவிருத்தி செய்ததற்காக வாக்குப்போட வேண்டும் என்று இல்லை. சாள்ஸ்சுக்கு முன்னாள் வந்து கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை என கூறுவதற்கு எவருக்கும் தைரியம் இல்லை. நாங்கள் அரசாங்கத்திடம் சண்டைபிடித்து கிடைத்த அபிவிருத்தியே இங்கு இடம்பெற்றுள்ளது.

2018 ஆம் அண்டு விக்னேஸ்வரன் சிவசக்தி ஆனந்தன் கூட்டணி கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தமிழர் கூட்டணியில் கேட்டது. தமது சொந்த நலனுக்காக தமிழர்களின் இருப்பை இல்லாதொழிப்பதற்காக செயற்படுகின்றனர். எனவே மக்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE