;

Wednesday 12th of August 2020 12:33:09 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா தொற்று நோயின் தாக்கம்  10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும்; டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ்!

கொரோனா தொற்று நோயின் தாக்கம் 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும்; டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ்!


உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் நுாறாண்டுக்கு ஒரு முறை, வரலாறு காணாத சுகாதாரப் பிரச்னையை சந்திக்கின்றன. கடந்த, 1918 இல் ஸ்பானிஷ் புளு பல கோடி மக்களை மாய்த்தது. தற்போது, கொரோனா வைரஸ், 1.80 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. உயிரிழப்பு 6.80 இலட்சத்தை தாண்டியுள்ளன என உலக சுகாதார அமைப்பின் அவசர குழுவின் கூட்டத்தில் பேசிய அவா் கூறினார்.

அத்துடன் உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கும்.

உலக சுகாதார அமைப்பு, கடந்த, ஜனவரி 30 -இல் கொரோனா நோய் தொற்று குறித்து உலக நாடுகளுக்கு பொது சுகாதார அவசர எச்சரிக்கை விடுத்தது. அப்போது, சீனாவில் மட்டும் தான் கொரோனா பரவியிருந்தது. அதன் பின் அதன் பரவல் வேகமும், பாதிப்பும் எண்ணிப் பார்க்க முடியாதபடி உள்ளது எனவும் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சி சாதனை வேகத்தில் நடைபெற்றுவந்தாலும் அது பயன்பாட்டுக்கு வரும்வரை தற்போது எம்மிடம் உள்ள வளங்களைக் கொண்டே அதனை எதிர்த்துத் தீவிரமாகப் போராட வேண்டும். அத்துடன் கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதனோம் கேப்ரியாசெஸ் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE