Tuesday 23rd of April 2024 03:01:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். தேர்தல் மாவட்டம்: விருப்பு வாக்கு விபரம்!

யாழ். தேர்தல் மாவட்டம்: விருப்பு வாக்கு விபரம்!


நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில்

சிவஞானம்-சிறிதரன் - 35884

மதியாபரணம்-சுமந்திரன் - 27834

தர்மலிங்கம்-சித்தார்த்தன் - 23840

சசிகலா-ரவிராஜ் - 23098

ஈஸ்வரபாதம்-சரவணபவன் - 20392

மாவை சேனாதிராசா - 20358

பாலச்சந்திரன்-கஜதீபன் - 19058

இமானுவேல்-ஆனோல்ட் - 15386

குருசாமி-சுரேந்திரன் - 10917

தேவநாயகம்-தபேந்திரன் - 5952

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில்

கஜேந்திரகுமார்-பொன்னம்பலம் - 31658

செல்வராசா-கஜேந்திரன் - 24794

விஸ்வலிங்கம்-மணிவண்ணன் - 22741

கனகரத்தினம்-சுகாஷ் - 21463

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்களில்

க.வி.விக்னேஸ்வரன் - 21554

கந்தையா-அருந்தவபாலன் - 12674

கனகலிங்கம்-சிவாஜிலிங்கம் - 10121

அனந்தி-சசிதரன் - 9193

சுரேஷ் பிரேமச்சந்திரன் - 7756

நல்லதம்பி-சிறிகாந்தா - 3702

ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில்

டக்ளஸ்-தேவானந்தா - 32156

முடியப்பு-ரெமிடியஸ் - 10780

ஐயாத்துரை-சிறிரங்கேஸ்வரன் - 10545

சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்ட

அங்கஜன்-இராமநாதன் - 36895

இலங்கை தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 3 பாராளுமன்ற அங்கத்தவர்கள் தெரிவாகியிருந்த நிலையில் அவர்களை தீர்மானிக்கும் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் வலிந்து மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டதான கருத்து நிலவியதை அடுத்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்ற யாழ் இந்து கல்லூரி வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

தமிழரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட மதியாபரணம்-சுமந்திரனது பெயர் முன்னர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த பட்டியலில் இல்லாத நிலையில், முன்னர் விருப்பு வாக்கு அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த சசிகலா-ரவிராஜ் மற்றும் தர்மலிங்கம்-சித்தார்த்தன் ஆகியோர் இறுதி நேரத்தில் பின்னடைவை சந்தித்தாக கூறப்பட்டதால் மேற்குறித்த அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE