Thursday 25th of April 2024 09:23:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
நான்காவது முறையாகப் பிரதமராக  ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்கிறார் மகிந்த!

நான்காவது முறையாகப் பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்கிறார் மகிந்த!


இலங்கைப் பொதுத் தோ்தலில் 146 இடங்களை பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்பு சத்தியப்பிரமானம் செய்து அவா் பதவியேற்றுக்கொள்வார்.

இது பிரதமராக அவரது நான்காவது பதவிக் காலமாகும்.

2004 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசில் அவர் முதலாவதாக பிரதமராகப் பதவி வகித்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரசிங்கவை பதவி நீக்கி 2018 அக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை இடைக்காலப் பிரதமராக நியமித்தார்.

எனினும் இந்த நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் விசேட வர்த்தமானி மூலம் 2018 நவம்பர் 9 மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதையடுத்து 2019 நவம்பர் 21 அன்று மூன்றாவது தடவையாக பிரதமராக மகிந்த நியமிக்கப்பட்டார்.

இவ்வாறான நிலையிலேயே நான்காவது முறையாக இலங்கைப் பிரதமராக மகிந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார்.

அவரது அமைச்சரவையும் இவ்வார இறுதியில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE