Friday 29th of March 2024 04:56:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார்; இரா.சம்பந்தன்!

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார்; இரா.சம்பந்தன்!


நடந்து முடிந்த 2020ம் ஆண்டு பொது தேர்தலில் 09 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதை தொடர்ந்து இன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசைகள் இடம் பெற்றது.

குறித்த வழிபாட்டில் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பொன்று அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன்;;;

இம்முறை இடம் பெற்ற தேர்தல் ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை.

மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்று கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்து உள்ளனர். இதனால் 20 ஆசனங்கள் எதிர்பார்க்கபட்ட போதிலும் கூட்டமைப்பிற்கு 09 ஆசனம் கிடைத்திருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேலும் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதியும் மற்றும் கெளரவமான பிரஜையாக வாழ தீர்வு வழங்கப்பட வேண்டும். அதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் ஆட்சி அமைக்கும் அரசின் நிலைபாட்டை கொண்டு எமது இலட்சியத்தை அடைவோம் என ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE