Wednesday 24th of April 2024 08:00:52 PM GMT

LANGUAGE - TAMIL
-
2015 உடன்  ஒப்பிடுகையில் 2020 –இல்  188,795 வாக்குகளை இழந்த கூட்டமைப்பு!

2015 உடன் ஒப்பிடுகையில் 2020 –இல் 188,795 வாக்குகளை இழந்த கூட்டமைப்பு!


2015 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தலில் சுமார் 1 இலட்சத்து 88 ஆயிரத்து 795 வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது.

2015 பொதுத் தோ்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 இலட்சத்து 15 ஆயிரத்து 963 வாக்குகளைப் பெற்றிருந்தது. இது பதிவான செல்லுபடியான மொத்த வாக்குகளில் 4.62 வீதமாகும்.

2015 தோ்தலில் 14 ஆசனங்களை வென்ற கூட்டமைப்பு 2 தேசியப் பட்டியல் ஆசனங்களுடன் 16 பேரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது.

எனினும் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு 327,168 வாக்குகளையே பெற்றுக்கொண்டது. இது பொதுத் தோ்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 2.82 வீதமாகும்.

இதன்மூலம் கடந்த தோ்தலில் 2 தேசியப் பட்டியல்களுடன் 16 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு இந்தத் தோ்தலில் ஒரு தேசியப் பட்டியலுடன் 10 ஆசனங்களையே பெற்றுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE