;

Tuesday 29th of September 2020 05:56:09 PM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 61 ஆயிரத்தை கடந்த தொற்று இனம் காணப்பட்டுள்ளமையானது இதுவரையான கொரோனா தொற்றில் அதிகூடிய நாளாந்த தொற்றாக பதிவாகியுள்ளது.

இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள நாளாந்த கொரோனா நிலவர அறிக்கையின் அடிப்படையில் இன்று (ஓகஸ்ட்-08) காலை 8.00 மணி வரை 61 ஆயிரத்து 537 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்து மொத்த தொற்று 20 இலட்சத்து 88 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை வரையான கடந்த 24 மணிநேரத்தில் உலகளவில் ஏற்பட்ட நாளாந்த கொரோனா தொற்று நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஏற்பட்ட தொற்று இரண்டாவது அதிகூடிய தொற்றாக பதிவாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 933 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 4 இலட்சத்து 90 ஆயிரத்து 262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 17 ஆயிரத்து 92 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அடுத்ததாக தமிழ்நாட்டில் 2 இலட்சத்து 85 ஆயிரத்து 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களது எண்ணிக்கையும் 4 ஆயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு ஆந்திர பிரதேசத்தில் ஆயிரத்து 842 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2 இலட்சத்து 6 ஆயிரத்து 960 பேருக்கும் கர்நாடகாவில் 2998 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 924 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புது டெல்லியில் 4 ஆயிரத்து 82 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1 இலட்சத்து 42 ஆயிரத்து 723 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை 14 இலட்சத்து 27 ஆயிரத்து 5 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 6 இலட்சத்து 19 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்தும் 3வது இடத்தில் இருந்து வருகிறது.

இதுவரை உலகளவில் ஒரு கோடியே 95 இலட்சத்து 72 ஆயிரத்து 939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 7 இலட்சத்து 24 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

50 இலட்சத்து 95 ஆயிரத்து 903 தொற்றுகளுடன் அமெரிக்க யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உச்ச நிலைபெற்று முதலாவது இடத்திலும் 29 இலட்சத்து 67 ஆயிரத்து 64 தொற்றுகளுடன் பிரேசில் 2வது இடத்திலும் நீடிக்கிறது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, அமெரிக்கா, உலகம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, புது தில்லி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE