Wednesday 24th of April 2024 08:09:38 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாருடைய நெருக்குதல்களும் இன்றி அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரும்பான்மை பலம் புதிய அரசிடம் உண்டு!

யாருடைய நெருக்குதல்களும் இன்றி அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரும்பான்மை பலம் புதிய அரசிடம் உண்டு!


யாருடைய நெருக்கதல்களும் இன்றி அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த தேவையான பெரும்பான்மை பலம் அமைய இருக்கும் புதிய அரசுக்கு இருப்பதாக சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் புதிய அரசாங்கத்திற்கு இருப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் முழுமையான அதிகாரத்;தை மக்கள் புதிய அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர். எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றம் கூடும் போது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும்.

எனவே, அவசியம் ஏற்படின் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பலம் புதிய அரசாங்கத்திடம் உள்ளது. குறிப்பாக 19வது திருத்தச் சட்டத்தில் திரிபுபடுத்தப்பட்ட பல விடயங்கள் காணப்படுகின்றன. செயன்முறை ரீதியாக அவை தெளிவாகியுள்ளன.

இந்த நிலையில் அவசியாமாயின் அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, தங்களது கொள்கைக்கு அமைய சரியான தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தடைகள் ஏற்படுமாயின் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை.

ஏனைய கட்சிகள் வெறுமனே ஒத்துழைப்பினை வழங்காது. எவ்வாறு இருப்பினும் அவை முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டிய அவசியம் தற்போது இல்லை.

ஏனெனில் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட முழுமையான சட்டக் கட்டமைப்பை அவசியமான முறையில் மறுசீரமைப்பதற்கும், நவீனமயப்படுத்துவதற்குமான பலம் குறைபாடின்றி மக்களினால் புதிய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE