;

Saturday 19th of September 2020 03:15:59 PM GMT

LANGUAGE - TAMIL
.
இணைந்து போராடாமல் கொரோனாவிலிருந்து யாருமே மீள முடியாது என WHO எச்சரிக்கை!

இணைந்து போராடாமல் கொரோனாவிலிருந்து யாருமே மீள முடியாது என WHO எச்சரிக்கை!


கொரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டும் என்றால் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் உலக நாடுகள் சுயநலமாக நடந்துகொண்டால் ஒருவரும் மீள முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

சுவிட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் இருந்தவாறு நேரலை ஊடாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போதே அவா் இவ்வாறு கூறினார்.

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் சுயநலன் காட்டுவது மிகவும் தவறானதாகும். அத்தகைய சுயநலத்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது.

கொரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டும் என்றால் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டார்.

இது உலகமயமாக்கல் காலம். அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன.இத்தகைய சூழலில் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவிக் கொண்டிருந்தாலும் தங்கள் நாட்டுக்கு மட்டும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற்றுவிடலாம் என்று நினைப்பது மிகவும் தவறு எனவும் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சுவிட்சர்லாந்து, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE