Friday 29th of March 2024 05:57:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
இரவோடிரவாக மாமனிதர் ரவிராஜின் சிலை அவமதிப்பு! (இணைப்பு)

இரவோடிரவாக மாமனிதர் ரவிராஜின் சிலை அவமதிப்பு! (இணைப்பு)


விருப்பு வாக்கு விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்ட சசிகலா ரவிராஜிற்கு நீதி கோரி மாமனிதர் ரவிராஜின் உறவினர்கள் ஆதரவாளர்களால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மாமனிதர் ரவிராஜின் சிலை அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் அமைந்துள்ள தென்மராட்சி பிரதேச செயலக வளாகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலையின் முகத்தை கறுப்புத் துணியால் மூடியும் கை, கால்களை சிவப்பு, மஞ்சள் துணிகளால் கட்டியும் இழைக்கப்பட்ட அநீதிக்கு தமது எதிர்ப்பினை ரவிராஜின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து அங்கு இருந்து கவனயீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்திருந்த நிலையில் நேற்று அங்கிருந்து ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகம் நோக்கி நடை பயணத்தையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சிலைக்கு கட்டப்பட்டிருந்த துணிகள் அகற்றப்பட்டு பூச்சாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் போராட்டத்திற்கு எதிரானவர்கள் மேற்கொண்டிருந்தால் அவருடைய குடும்பத்தாலும் அச்சமடையவேண்டிய அபாயம் உள்ளதாக பிரததேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், தென்மராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE