Friday 19th of April 2024 05:12:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து  கனடாவில் குறைந்துவரும் வேலையின்மை வீதம்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து கனடாவில் குறைந்துவரும் வேலையின்மை வீதம்!


கொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கனடா தளர்த்திவரும் நிலையில் அங்கு பொருளாதாரம் மீண்டும் மீட்சியடைந்து வருகிறது.

ஏப்ரல் மாதத்திலிருந்து கனடாவில் சுமார் 30 இலட்சம் போ் வேலைகளை இழந்தனர். இந்நிலையில் இழந்த சுமார் 55 சதவீத வேலைவாய்ப்புக்கள் மீள உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஜூலை மாதத்தில் சுமார் 4 இலட்சத்து 19 ஆயிரம் போ் வேலைகளில் மீள இணைக்கப்பட்டனா். இது முந்தைய மாதத்தை விட 2.4 சதவீதம் அதிகமாகும்.

மிகப் பெரிய வேலை இழப்பின் பின்னர் நிலைமை இப்போது வேகமாக முன்னேற்றம் அடைந்து வருவதாக கனடா புள்ளிவிபரவியல் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மீள வேலைவாய்ப்புப் பெற்றவா்களில் பெரும்பாலானவா்கள் பகுதி நேரமாகப் பணியாற்றியவா்களாவர்.

ஜூன் மாதத்தில் 73,000 முழுநேர பணியாளர்கள் மீண்டும் தமது வேலைகளில் இணைக்கப்பட்டனர். அதேநேரம் ஜூலை மாதத்தில் 345,000 போ் பகுதிநேர பணியாளா்கள் மீளவும் வேலைகளில் உள்வாங்கப்பட்டனர்.

இதேவேளை, புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மையினருக்கான வேலையின்மை 10.9 சதவீதமாகக் குறைந்ததுள்ளது. எனினும் கனடாவில் இன்னும் 22 இலட்சம் போ் வேலையற்றோராக உள்ளனர்.

கனடாவில் வசிக்கும் தெற்காசியர்கள், அரேபியா்கள் மற்றும் கறுப்பா்கள் போன்ற பல சிறுபான்மை குழுக்களின் வேலையின்மை விகிதங்கள் தொடா்ந்தும் கணிசமான அதிகரிப்பிலேயே காணப்படுகின்றன.

சிறுபான்மையினர் பெரும்பாலும் உணவகங்கள், சில்லறை வணிக நிறுவனங்களை வேலைக்காகச் சாந்ந்திருப்பதால் அவா்களில் வேலையின்மை வீதம் தொடா்ந்தும் அதிகரித்த நிலையிலேயே இருப்பதாக கனடா புள்ளிவிபரவியல் துறை சுட்டிக்காட்டியுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE