Friday 19th of April 2024 11:30:29 PM GMT

LANGUAGE - TAMIL
-
தேசியப்பட்டியல் சர்ச்சையை தீர்க்க முன்வருமாறு துரைராஜசிங்கம் அழைப்பு!

தேசியப்பட்டியல் சர்ச்சையை தீர்க்க முன்வருமாறு துரைராஜசிங்கம் அழைப்பு!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையினை முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை முன்கொண்டுள்ள அனைவரும் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு சரிவு காரணமாக ஒரேயொரு தேசியப்பட்டியல் நியமனமே கிடைக்கப்பெற்றது.வழமையாக இந்த தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சி தலைவர்கள் சந்தித்து ஒரு முடிவினை எடுப்பார்கள்.

தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் நான் எடுக்கும் முடிவினை தெரிவிப்பவனாக கலந்துரையாடலில் கலந்துகொள்ளவேண்டிய நடைமுறைகளே இருந்துவந்தது.

இம்முறை நான் திருகோணமலை சென்போது அவ்வாறான நடைமுறை முடிந்திருக்கும் என்ற கருதல் இருந்தது. ஆனால் அது தொடர்பில் தெளிவான விளக்கத்தினைபெறவில்லை.

வழக்கம்போல பங்காளிக்கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது.தேசிய பட்டியல் தொடர்பில் பேசவேண்டும் வாருங்கள் என்று எனக்கு திருகோணமலையில் இருந்து அழைப்புவந்தது.

நான் செல்லமுன்பாக தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கூறியபோது நான் வரவில்லையென்று சொன்னார். நான் திருகோணமலைசென்று தேசிய பட்டியலுக்கு யாரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடலை தலைவர் மற்றும் சுமந்திரனுடன் செய்தோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்ட இடங்களில் அம்பாறை மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை.அதனை அங்கு வழங்கவேண்டும் என்ற முன்மொழிவினை நான் முன்வைத்தேன்.

ஏற்கனவே நியமனக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் திருகோணமலையில் குகதாசனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் அதனை அமுல்படுத்துவது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் என சொல்லப்பட்டது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE