Tuesday 16th of April 2024 06:37:42 AM GMT

LANGUAGE - TAMIL
.
(2ம் இணைப்பு) ஐ.தே.க. தலைமை மாற்றத்திற்கு 6 மாத அவகாசம்: அதுவரை ரணில் தலைவராக தொடர செயற்குழு அனுமதி!

(2ம் இணைப்பு) ஐ.தே.க. தலைமை மாற்றத்திற்கு 6 மாத அவகாசம்: அதுவரை ரணில் தலைவராக தொடர செயற்குழு அனுமதி!


ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமையை தெரிவு செய்வதற்று 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் அதுவரை ரணில் தலைவராக தொடரவும் கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு சிறிகொத்தாவில் இன்று முற்பகல் கூடிய நிலையில் கட்சியின் தலைமையை இளம் தலைவர் ஒருவரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக புதிய தகுதிவாய்ந்த இளம் தலைவரை தெரிவு செய்வதற்காக ஆறு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இடைப்பட இக்காலத்தில் புதிதாக தலைமைக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்து அவர்களது செயற்பாடுகளின் அடிப்படையில் தகுதியான ஒருவரை தலைமைப் பொறுப்புக்கு தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதுவரை தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே தலைமை பொறுப்பை வகிப்பார் எனவும் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய இணைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமப் பொறுப்பை இளம் தலைவர் ஒருவரிடம் வழங்க வேண்டும் என்ற அக்கட்சியின் மத்திய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தலைமைப் பொறுப்பை இளம் தலைவரிடம் வழங்க ரணில் நடவடிக்கை எடுக்க சம்மதித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு சிறிகொத்தாவில் இன்று முற்பகல் கூடியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மாற்றம் தொடர்பில் இழுபறிபறிகள் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பெரும்பாலான உறுப்பினர்கள் கட்சிக்கு இளம் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர் எனவும், அது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது எனவும் கட்சியால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைவாக கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, விரைவில் தகுதியுடைய இளம் உறுப்பினர்களுக்கு சில பொறுப்புகளை ஒப்படைத்து, அவ்விடயத்தில் அவர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து பொருத்தமானவரை நியமிக்கவுள்ளார் என்று அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE